
அந்த சிவனே வந்து சொல்லட்டும். நான் விரதத்தை கைவிடுகிறேன் என்றார் சாம்ப மூர்த்தி. சமீப காலங்களில் உறவுகள், நாட்டு நடப்புகள், அரசியல், ஆன்மீகம் இவையெல்லாமே தடம் மாறிப் போவதாக நினைக்கிறார்.
“எப்போதோ ‘மாபாதகம் செய்தவனையெல்லாம் திருத்துவதற்காக விளையாடல்கள் நடத்தினானே! இப்போது என்ன செய்கிறான்? தூங்குகின்றானா? தூங்குவதுபோலா பாசாங்கு செய்கிறானா? அவனையே சதா சர்வகாலமும் நினைந்து உருகும் பக்தர்களின் நிலை என்ன?” சாம்ப மூர்த்திக் கேட்டுக் கொண்டிருந்தார். கையில் சுருட்டு வேறு!
உண்ணா விரதம் மேற்கொண்டு ஐந்தாவது நாள் இன்று. குடும்பத்தினர் மிகவும் வருத்தமுற்றனர். அவரின் தேவை அவர் குடும்பத்திற்கு இன்றியமையாதது.
“என்ன சாம்பு? நீ உண்ணா விரதம் இருந்துட்டா எல்லாம் மாறிடுமா? அவங்கவங்க அவங்க கடமையை சரியாக செய்யணும். கலி காலமப்பா. மாற்றம் வரும். எழுந்து போய் உன் குடும்பத்தைப் பாரு. சிவனே என்னை அனுப்பினதா நெனச்சுக்கோ” என்றார் மாறு வேடத்தில் வந்த சிவன். அவன் அறியாத சித்து வேலைகளா? நல்லது நடக்கும். நடத்துவான்.
மடிப்பாக்கம்
