லீலா ராமசாமி/பெற்றால்தான் பிள்ளையா?

“அட, அகிலா! ஊரிலிருந்து எப்ப வந்தே? கையில யாரு குழந்தை?”

“ஊர்லருந்து நேத்தே வந்துட்டேன் கனகா. இது என் ஒண்ணுவிட்ட தங்கச்சி குழந்தை.”

“ஊர்லருந்து வந்திருக்காங்களா?”

“இல்லை. ஒரு விபத்துல திடீர்னு தங்கச்சியும் தங்கச்சி புருஷனும் இறந்துட்டாங்க. அதுக்காகத்தான் ஊருக்குப் போனோம். வேறே சொந்தக்காரங்க யாரும் இல்லை. அதான் குழந்தையை நான் எடுத்துட்டு வந்துட்டேன்”

“அதுவும் சரிதான். உனக்கும் கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சு. இன்னும் குழந்தை இல்லை. உனக்குக் குழந்தை பிறந்தா இவனை என்ன பண்ணுவே?”

“எத்தனை குழந்தை பிறந்தாலும் இவன்தான் என் முதல் குழந்தை!’

“காலையிலேயே எங்கேயோ கெளம்பிட்டே”

“வீட்டுக்கு மொதோ மொதலா குழந்தை வந்திருக்கு. அதுதான் கோயிலுக்குப் போறோம். அதோ என் வீட்டுக்காரரும் வந்துட்டாரு. வரேன் கனகா”

“என்ன அகிலா, கனகாகிட்ட குழந்தையைப் பத்தி என்ன சொன்னே?”

“தங்கச்சியும் தங்கச்சி புருஷனும் இறந்துட்டதால நாங்க குழந்தையை எடுத்துட்டு வந்து வளக்கிறோம்னேன்.”

“நன்றி அகிலா! ‘இது தத்துக் குழந்தை; எத்தனை வருஷமானாலும் எங்களுக்குக் குழந்தை பிறக்காது. என் புருஷனுக்குக் குறை இருக்கு’ன்னு சொல்லாம காப்பாத்துனதுக்கு!”

‘ஒரு தம்பதிக்குக் குழந்தை இல்லன்னா முதல்ல மனைவிக்குத்தானே மலடிப் பட்டம்?’ என்று நினைத்துக்கொண்டாள் அகிலா.

(125 வார்த்தைகள்)

                   ******


காஞ்சிபுரம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன