
மாலதியின் வீட்டுக்கு அன்றாட வேலைக்கு வந்த பணிப்பெண் அஞ்சலை, சின்னக் குட்டி ரித்தேஷின் சிரிப்பை பார்த்து,
“குட்டி நேத்து முழுதும் அழுதுக்கிட்டு இருந்தானே, ஆஸ்பத்திரி போனீங்களா?” எனக் கேட்டாள்.
“நேத்து ஞாயிற்றுக்கிழமைனு எந்த கிளினிக்கும் திறக்கல. மல்டி ஸ்பெஷலாட்டி ஆஸ்பித்திரிக்கு போனா, தேவையில்லாத டெஸ்ட் எல்லாம் எடுக்கச் சொல்வாங்களோனு பயமா இருந்துச்சு.”
“அப்புறம் என்ன செஞ்சீங்க?”
“பக்கத்து வீட்டு நர்மதாவோட மாமியார் வந்து, ஏதோ கைப்பக்குவம்னு அரைச்சு குடுத்தாங்க. நேத்தைக்கே அவனுக்கு சரியாகிடுச்சி,” என சந்தோஷமாக சொன்னாள் மாலதி.
“என்ன பக்குவம்னு கேட்டு தெரிஞ்சு வைச்சுக்குங்க. இன்னொரு நாள் பயன்படும்.” அஞ்சலை கூறினாள்.
‘இதுக்குதான் அந்த காலத்திலே வீட்டோட மாமியாரை வைச்சு ஆதரிச்சாங்க. இதை இப்ப நாம சொன்னா வீணா பொல்லாப்பு’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள் அஞ்சலை.
(86 வார்த்தைகள்)
