
வாய்ப்பு
தற்செயலாய்த்தான் சுகந்தியை சந்தித்தாள் பிரேமா.
“ஏய் சுகா”
இருவரும் அடுத்தடுத்த தெருக்கள் என்று புரிந்தது. பள்ளி நாட்களில் ஒன்றாய் சுற்றியவர்கள்.
இப்போது வாரம் ஒரு முறையாவது சுகந்தி வீட்டுக்கு பேரனுடன் வந்து விடுகிறாள் பிரேமா. சமயங்களில் இரண்டு முறை கூட.
சுகந்தி கேலியாகச் சிரிப்பாள்.
“அப்பல்லாம் முணுக்னா கோவிச்சுட்டு மூஞ்சிய திருப்பிகிட்டு போவ. இப்ப பொசுக்னு வந்துடற. மருமக ஒண்ணும் சொல்ல மாட்டாளா”
பேரனுக்குத் துணையாக இன்னொரு குழந்தை பெத்துக்கோ என்றால் மகன் மருமகள் இருவருமே பிடி கொடுக்க மறுக்கிறார்கள்.
இப்படி தனியே விட்டு வந்தால் அதற்கான வாய்ப்பு கிடைக்குமோ என்கிற தன் ஆசைதான் என்று இவளிடம் பிறகு சொல்லலாம்.
பிரேமா சும்மா சிரித்து வைத்தாள்.
