ஜி ஏ பிரபா/ஆசீர்வாதம்


“குழந்தையை எல்லார்கிட்டயும் கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிகோம்மா”…பூஜை முடித்துக் கிளம்பினார் சாஸ்திரிகள். ஹாலில் இருந்தவர்கள் கைகளுக்குள் தாவித்தாவி சென்றது குழந்தை.
இரண்டு வயதுக் குழந்தை.
பிறந்ததிலிருந்து ஏதோ ஒரு நோய் படுத்திக் கொண்டே இருக்கிறது. எப்போதும் ஒரு அழுகை.
குழந்தைக்கு ஆயுஷ்ஹோமம் செய்தால் சரியாகும் என்றார்கள். ஹோமம் முடிந்தது.
சாந்தி சுற்றிலும் பார்த்தாள்.
வேலைக்காரி பொன்னி ஓரமாக நின்றிருந்தாள். குழந்தையைத் தொட அவளை அனுமதிப்பதில்லை மாமியார்.
கல்யாணம் ஆகிப் பல வருடங்களாகியும் பொன்னிக்கு குழந்தை இல்லை. எனவே அவள் கண் படும் என்பார் மாமியார்.
“இங்கே வா பொன்னி” என்று அவளை அழைத்தாள் சாந்தி.
“என்னம்மா?” அருகில் வந்த பொன்னியிடம் குழந்தையை நீட்டினாள் சாந்தி.
“ஆசிர்வாதம் பண்ணு”
“ நா… நானா?” தயங்கினாள் பொன்னி.
“ஆமாம். ஒரு குழந்தையின் அருமை என்னவென்று உனக்குத்தான் தெரியும். நீ ஆசீர்வாதம் செய்தால் என் குழந்தை நன்றாக இருப்பான்”
பொன்னியின் கண்ணில் நீர் தேங்கியது.
தயக்கத்துடன் மாமியாரை ஏறிட்டாள்.
“வாங்கிக்கோ பொன்னி” என்றார் மாமியார்.
பொன்னி குழந்தையை வாங்கி அழுத்தி முத்தமிட்டாள்.
“மகராசனா நல்லா இரு தங்கம்”-வாழ்த்தினாள்.
“இனி குழந்தைக்கு எதுவும் உடல் படுத்தாது” என்றது சாந்தியின் உள்ளுணர்வு.

124 வார்த்தைகள்.

கோவை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன