
பனாரஸ் பஞ்சகங்கா காட்.கங்கை அன்னிக்கு என்னவோ ஆரவாரமில்லாமல் ஓடிட்டிருந்தது. அதில் படகுகள் கூட அமைதியா மிதக்கற மாதிரி இருந்தன.
சந்திரன் திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்தான்.சிங்கப்பூர்ல நல்லா சம்பாதிச்சு சந்தோஷம இருந்த சந்திரனுக்கு மூணு மாசமாய் மனதில் ஏதோ ஒரு கலக்கம் ஒரு வேலையும் செய்ய முடியலை.
யாரோ சொன்னாங்கனு இந்தியால திருவண்ணாமலை வந்து சேர்ந்தான்.பவுர்ணமி நிலவில் கிரிவலம் வரப்ப அந்த பெரியவர்,”தம்பி இங்கே வா,மனக் கிலேசமா?காசிக்குப் போ.சுக்கா சித்தரை பாரு”
சந்திரன் மேற்கொண்டு ஏதாவது சொல்வார்னு காத்திருந்தான் ம்ஹூம் சலனமே இல்லை.பனாரஸ்ல அந்த சுக்கா சித்தரை தேடிண்டு இவ்வளவு தூரம் ஒவ்வொரு காட்டா சுத்தறான்.பிந்து மாதவா காட் வந்தப்ப அங்கே இருபது இருபத்தஞ்சு பேர் நடுவில் ஜடாமுடியுடன் தலையை விசித்திரமான கோணத்தில் சாய்த்துக்கொண்டு ஹூக்கா குழாயை புகைத்துக் கொண்டிருந்த அவரைப் பாத்தான்.இவர்தான் சுக்கா சித்தர்னு தோணியது.நெடுஞ்சாண் கிடையா காலில் விழுந்தான். புகையை இழுத்து விட்டு வலது கையை உயரே தூக்கினார். ஒரு பிடி சாம்பலை அவன் மேல் தூவி,பிடி சாம்பலை கையில் கொடுத்து கங்காதேவியை பார்த்தார்.
ஒரு இயந்திர மனிதன் போல சந்திரன் எழுந்து கங்கையில் அந்த சாம்பலை கரைத்தான்.மனது இலகுவானது

சுக்கா சித்தர் நல்லா இருக்கார்
நம்பிக்கைதான் வாழ்க்கையின் ஆணி வேர் .
சந்திரன் நம்பினான் . காலில் விழுந்தான் .மனது அமைதியானது.