
ஊருக்கு வெளியே இத்தனை வருடங்கள் யாராலும் கண்டு கொள்ளப் படாதிருந்த அந்தப் பாழடைந்த கோயிலில்
நெற்றியில் பட்டை, கழுத்திலே ருத்ராட்ச கொட்டை. சிவந்திருக்கும் கண்கள். சடாமுடியும், விரலிடுக்கில் கனன்று கொண்டிருக்கும் சுருட்டு.
இந்தக் கோலத்தில் ஒரு புது சாமியார்.
எந்தப் பிரச்சனை பற்றிக் கேட்டாலும் வாயே திறக்க மாட்டார். கண்ணசைவும் கையசைவும்தான். அதனால் அவரை மௌனகுருவாக்கி விட்டனர் மக்கள்.
யாரென்று தெரியாமலே அவரிடம் தங்கள் பிரச்சினைகளை க
கொண்டு வந்து கொட்டினர் மக்கள் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல்.
ஒருநாள் ஒரு பணக்காரர் வந்து,
“சாமி, என்னோட தம்பி மகன் ஊமைங்க. காணாம போய் ஒரு வருசமாச்சுங்க. தேடாத எடமில்ல.. பரம்பரை சொத்துக்கு அவன்தானுங்க வாரிசு, அவன் திரும்ப வரலைன்னா சொத்தெல்லாம் டிரஸ்டுக்குப் போயிடுங்க.
இத்தன வருஷமா இந்த சொத்துக்காக எந்தம்பியைக் கொலை செஞ்சது, பையனைக் கொடுமைப் படுத்தினதெல்லாம் வீணாப் போச்சுங்களே. அவன் எங்கதான் போயிருப்பானு உங்க ஞான திருஷ்டி ல பாத்து சொல்லுங்க சாமி!”
சாமியார் படக்கென்று தன் தலையை சாய்த்து கையை உயர்த்தி ஒற்றை விரலைக் காட்ட,
“ஐயையோ மேல போய்ச் சேந்துட்டானா”
புலம்பியவரைப் பொறி வைத்துப் பிடிக்க அந்த ஊமைப் பையனையே சாமியார் கோலத்தில் அனுப்பிய போலீஸ் கைது செய்தது.
(128 வார்த்தைகள்)
