தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்/புண்ணியகோடி

” ஏன்ட்டீ, டீ வச்சா சொல்ல மாட்டியா. ஆறி அவலாப் போச்சு. வரவர இந்த வீட்ல சாப்பாடு கூட ஏனோதானோன்னு பண்ண ஆரம்பிச்சுட்டே. எந்த நேரமும் மைபைலு, ஸீரியலுனுட்டு” பங்கஜத்தைத் தாளித்தெடுத்தார் அங்குசாமி. ஏதும் காதுல விழாத மாதிரி ஸீரியலில் மாமியார், ஆள் மாறாட்டம் பண்ணுவதைக் கேட்க ஆரம்பித்தார் பங்கஜம். கணவர்லாம் இரண்டாம் பட்சமாகி முப்பது வருஷத்துக்கு மேலாச்சு. எரிச்சலோடு பூங்கா பக்கம் கால்களை நகர்த்தினார் அங்குசாமி.

அடுத்த நாள் காலைலருந்தே படபடவென பெயருக்கு உப்புமா கிண்டிவிட்டு பட்டுச் சேலைக்குள் சரணடைந்தார் பங்கஜம். அதற்குள் பக்கத்து வீட்டு பாட்டி பங்கஜத்தை அவசரப்படுத்த வந்துட்டார்.
” ஏட்டி பங்கு, வெத்தல பாக்கு காணிக்கை எல்லாம் மறக்காம எடுத்து வச்சுட்டியா.”

” எங்க போறீங்க ” கேட்டார் அங்குசாமி.

” பக்கத்து ஊரில் புண்ணியகோடின்னு ஒரு சாமியாரு ;இமயமலை அடிவாரத்துலருந்து வந்துருக்காராம். கும்பிடப் போறோம்.”

சிரித்தார் அங்குசாமி. ” அவனா! ஸ்கூல்ல படிக்காம சினிமா, புகையிலை, கஞ்சான்னு அலைஞ்சுட்டு, சாமியாராப் போனா நம்ம இஷ்டப்படி கஞ்சா அடிக்கலாம்னு ஓடின புண்ணியகோடிதானே. அவனையா கும்பிடப் போறீங்க. வீட்ல கணவனுக்குச் சரியா சமைச்சுப் போடாம இப்படி டீவி, சாமியாருன்னு கண்டவனக் கும்பிடுறதே உங்களுக்லாம் வேலையைப் போச்சு.” சிரித்தார் அங்குசாமி.

(123 வார்த்தைகள்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன