மாம்பாக்கம் நாணா/பித்தன்

சாம்பலை உடலெங்கும் பூசியபடி, வெறித்த கண்களுடன் அமர்ந்திருந்தார் அந்த அகோரி.

ஊரார் அவரை ஒரு பித்தன் என்று எள்ளி நகையாடினர்.

கையில் பிடித்திருந்த சுருட்டின் புகையை ஆழமாக இழுத்து வானத்தை நோக்கி ஊதினார். அவரது வலது கை சட்டென உயர்ந்து, ஒரே ஒரு விரலை அண்டத்தை நோக்கி நீட்டியது.

​”இறைவன் எங்கே இருக்கிறான்?” என்று கூட்டத்தில் ஒருவன் ஏளனமாக எகிறிக் கேட்டான்.

​அகோரி சிரித்தார்.

சுருட்டின் சுடரொளி அவரது கண்களில் பிரதிபலித்தது. அடுத்த கணம், அவர் காட்டிய ஒற்றை விரலின் நுனியிலிருந்து நீல நிறப் பேரொளி விண்ணை நோக்கிப் பாய்ந்தது. வானம் இரண்டாகப் பிளந்து அண்டவெளியின் விஸ்வரூபம் அங்கே தெரிந்தது.

அந்தப் பிரம்மாண்டப் பேரொளியில் அகோரியின் உடல் மெல்லக் கரைந்து, “நீயும் அதுவே” என்ற ஓங்கார நாதத்துடன் அண்டவெளியில் கலந்து மறைந்தது.
​அவர் நின்ற இடத்தில் சுருட்டின் சாம்பல் மட்டுமே மிஞ்சியிருந்தது.

பித்தன் என்று சிரித்த கூட்டம், அதிர்ச்சியில் சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன