
பரமன் வரைந்திருந்த படத்தைப் பார்த்துவிட்டு ஆளாளுக்கு ஒரு கருத்து கூறிக் கொண்டிருந்தார்கள். சிலர் அவனை சிவன் என்றார்கள். சிலர் அவனை சித்தர் என்றார்கள். சிலர் அவனை பித்தன் என்றார்கள். ஆளாளுக்கு ஒரு கருத்து கூறிவிட்டு சரியா என்பதுபோல் பரமன் முகத்தை பார்த்தார்கள்.
பரமன் புன்னகைத்தான்.
“ரொம்ப சிம்பிள்ங்க… புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்பதை சொல்ல முயன்றிருக்கிறேன்” என்றான்.
அறிவுரை பிடிக்காத ஜனங்கள் அந்தப் பக்கமாய் நகர்ந்தார்கள்.
