
அவன் ஆராய்ச்சி மாணவன். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சித்தி அடைந்த யோகி ராம்சுரத் குமார் பற்றி அவன் புத்தகம் எழுதி இருக்கிறான்.
அது இன்னும் பரபரப்பாக விற்றுக் கொண்டிருக்கிறது. யோகியாரைச் சந்தித்த அனுபவத்தை எழுதி இருப்பான்.
இப்போது திருவண்ணாமலைக்கு திரும்பவும் வந்திருக்கிறான்.
திருவண்ணாமலையில் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்தான்.
யோகி ராம்சுரத்குமார் மாதிரி சித்தப் புருஷர் தென்படுவாராரென்று.
இது வரை அவன் கண்ணில் யாரும் தென்படவில்லை.
சோர்ந்து போய் வீடு திரும்ப எண்ணினான்.
“யாரைப் பார்க்க வந்தே..என்னைத்தானே!” என்று சத்தமாகக் குரல் கேட்க, திரும்பிப் பார்த்தான். இன்னொரு சித்தப் புருஷர். அவரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான்.
