ஜே. செல்லம் ஜெரினா/எங்கிருந்தோ வந்தான்!


சுருட்டுப்புகைய கால்மேல் காவ் போட்டு காலாட்டி படுத்து திடீரென்று ஒருகையை வானோக்கி உயர்த்திக் கொண்டு அதுவும் கழுத்து ஒரு தினுசாய் ஏடாகூடமாய் பார்க்கவே பயமாய் யாரிவன்?

அகோரியாம் ! சித்தராம்! ஏதேதோ கிசுகிசுப்புகள்.
ஒற்றை வார்த்தை பேசுவதில்லை..

சாப்பிடக் கொடுத்தால் சிலசமயம் வாங்குவான் . பலசமயம் இமைகூட அசையாது.

கங்காவுக்கு இவனைப்பார்ப்பதே பொழுதுபோக்கு.
புறக்கடையில் விழுந்து இடுப்பு முறிந்தது முதலே ஜன்னல்தான் உலகம்.

எல்லாமே படுக்கையில்தான்.
நாளை எண்ணிக் கொண்டிருந்தார். தூரத்து உறவுதான் துணை. கணவன் விட்டுப்போன காசும் வீடும் இப்போதைக்கு நிம்மதி.
ஆனால் மனதில் மட்டும் நிம்மதியே கிடையாது.
அப்பா அடித்ததற்காக வீட்டை விட்டோடிப் போன மகனின் ஞாபகம் கொல்லும்.

யார்யாரோ எங்கெங்கோ பார்த்ததாய் சொன்னார்கள்.ஒரே ஒருமுறை போஸ்டாபீஸ் போனுக்கு கூப்பிட்டனுப்பி
டில்லியிலிருப்பதாக சொன்னான்.

இவளோ “ நான் சாகும்முன்னே வந்துகொள்ளியை போடுடா “என்று அழுதாள்.

இன்றுவரை காணோம்.கங்காவுக்கும் நம்பிக்கை போய் விட்டது.

ஒருநாள் விடியலில் ஒப்பாரிச்சத்தம். கங்கா மூச்சை நிறுத்தியிருந்தாள்.

சவஊர்வலத்தில் இவனும் தொடர்ந்தான்.

யாரோ கொள்ளிவைக்கத் தயாராக

விசுக்கென்று கொள்ளியைப் பிடுங்கி சிதைக்கு தீமூட்டினான் . ஒரே கணம் தான்.

திரும்பியும் பார்க்காமல் வேகமாய் நடந்தான்.

நடந்ததை கூட்டம் புரிந்து கொள்ளுமுன்னே அவன் வெகுதூரம் போயிருந்தான்.

               **********

(125 வாரத்தைகள்)

One Comment on “ஜே. செல்லம் ஜெரினா/எங்கிருந்தோ வந்தான்!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன