
சேப்பாக் ஸ்டேடியம் வழியாக வந்தபோத அங்கே ஒரு சாமியார் வலது கையை தூக்கியவாரு அமர்ந்திருந்ததை பார்த்தேன் சுற்றிலும் கூட்டம் எதிரில் விரித்திருந்த துண்டில் நோட்டுகள். அருகில் ஒருவன் சாமியாரின் மகத்துவத்த சொல்லிக் கொண்டே அந்த பணத்தை எடுத்துக் கொண்டிருந்தான். அருகிலிருப்பவர்கள் பேசுவதை
கவனித்தேன்.
“ இவருக்கு எந்த டாக்டராலும் ட்ரீட் பண்ணமுடியாத வயிற்று வலியாம். அப்புறம் ஒரு ஜோஸ்யன் சொன்னானாம் நீ வேணும்னே தப்பு தப்பா பலதடவை செஞ்சபாவம்தான் இதுக்கு காரணம். அதுக்கு பரிகாரம் இந்தியா கிரிக்கட் க்ரவுன்டுக்கு பக்கத்தில கையை தூக்கி 10 நாள் அசையாம பேசாம உட்கார்ந்தா சரியாடும்னானம். “
“ அது சரி.. இந்த சாமியார் வேஷம்..அந்த ஆளு வேற ஏதேதோ கதை சொல்றான் ஒரே குழப்பமாயிருக்கே?”
“ அதுதான் நம்பாளுங்க புத்தி. இவர் இப்படி உக்காந்தத பாத்ததும் அந்த ஆளு அவருக்கு சாமியார் வேஷம் போட்டு காசு பண்ணலாம்னு ஐடியா பண்ணிட்டான்”
நான் இப்போ அவரை கூர்ந்து பார்த்தேன் ‘அட! இவர் சச்சினை எப்ப பாத்தாலும் தப்பாவே அவுட் கொடுப்பாரே வெஸ்ட் இன்டீஸ் அம்பையர் ஸ்டீவ் பக்னர் ஆச்சே!’
