ஷைலஜா/பரிசு

.

“என்ன படம் இது? சகிக்கல.ஒருபக்கமா தலையை சாய்ச்சி, ,ஒருகையை மேலதூக்கி..எரிகிற சுருட்டுவேற… ஓவிய போட்டிக்கு இப்படியா அனுப்பறது?பைசா காசுக்கு துப்பில்லாத ஓவியன் நீதாண்டா”

“அப்பா.!.அசோக் எப்பவும் அப்படித்தான் ஏதாவது புதுமையா வரையறேன்னு கிறுக்குவான்.
ஆனா சொல்ல முடியாது இந்த கிறுக்கலுக்கும்சின்ன பரிசு கிடைச்சிடும். “

தம்பிமோகன் சொன்னபடி அசோக்கிற்கு அந்த ஓவியத்திற்கு முதல் பரிசு கிடைத்துவிட்டது.
மீடியாக்கள்படையெடுத்தன.ஃபேஸ்புக் இன்ஸ்டாக்ராமில் அவனும் அந்த ஓவியமும்செய்தியாக வந்தன.

பேட்டி எடுக்கும் போது அசோக் சொன்னான். “ஓவியத்தில் உள்ள இவரை அரங்கனூர் கிராமத்தில் மரத்தடியில் பார்த்தேன். வித்தியாசமாக தெரிந்ததால் வரைந்தேன்”

அடுத்த சில மணிநேரங்களில் அசோக்கின் வீட்டிற்கு ஒரு இளைஞன் தன் தாயுடன் வந்தான்.

“.பல வருஷம் முன்பு காணாமல்போன எங்க அப்பாவை தேடிக் கொண்டிருந்தோம்.இறந்துட்டார்னு நினைச்சோம். அவர் ஒரு சாமியார் ஆகி உயிரோடு இருப்பது இப்ப தெரிந்தது உங்கள் ஓவியத்தினால்தான். எனக்கு அப்பாகிடைத்தார்.இந்தஒரு லட்சம் ரூபாய்செக் உங்க ஓவியத்துக்கு சன்மானமாக கொடுக்கிறோம்”
என்றான். உடனே
அசோக் தன் அப்பாவைப்பார்த்து புன்னகை செய்தான்.

One Comment on “ஷைலஜா/பரிசு”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன