கோயில் வாசலில் உட்கார்ந்திருந்த சாமியாரின் ஒரு கை எப்போதும் வானத்தை நோக்கியே இருந்தது.
அந்த வழியாகச் சென்ற சுரேஷ் கேட்டான்.
“சாமி… கையை ஏன் இப்படி தூக்கி வச்சிருக்கீங்க?”
“தவம் செய்கிறேன்!”
“எத்தனை வருஷமா?”
“பதினைந்து வருஷமா .”
சுரேஷ் ஆச்சரியப்பட்டான்.
“அடடா! கையை கீழே இறக்கவே இல்லையா?”
“இல்லை!”
“சாப்பிடும்போது?”
“இல்லை!”
“தூங்கும்போது?”
“இல்லை!”
” அப்போ எப்பதான் கைய இறக்குவீ
ங்க? “
“ ஓ அதுவா செல்ஃபி எடுக்கும்போது மட்டும்தான் ”
சாமியார் உடனே கையை இறக்கி, போனை எடுத்தார்.
“இதுக்கு மட்டும் இறக்குவேன்!”
சுரேஷ் சிரித்தான்.
“சாமி… அப்படியென்றால் உங்க தவம்?”
சாமியார் போனை பார்த்தபடி சொன்னார்:
“தவம் எல்லாம் இருக்கட்டும் தம்பி… இன்ஸ்டாகிராம் தினமும் ஸ்டோரி போடணுமே!”
“இது ஐடியாவா இருக்கே ” சிரித்தான் சுரேஷ்.
அடுத்த நிமிடம் சாமியார் மீண்டும் கையை மீண்டும் உயர்த்திக்கொண்டார்.
சுரேஷ் கேட்டான்:
“இப்போ ஏன் கைய தூக்கிடீங்க?”
“போட்டோ செல்ஃபீ நல்லா வரணும்னா… இந்த போஸ் தான் பெஸ்ட்!”
சுரேஷ்க்கு தலை சுற்றியது
இது தவமா… போஸா… யாருக்குத் தெரியும்!
(117 வார்த்தைகள் )
