பானுமதி வெங்கடேஸ்வரன்/ஓவியப் பார்வை

தன்னுடைய ஓவியங்களை ஸ்டார் ஹோட்டல் அதிபர் ஸ்ரீஜித் முன் கடை பரப்பினான் சிவா. “இதெல்லாம் நல்லாத்தான் இருக்கு, பட் ஐ வாண்ட் சம்திங் அப்ஸ்ட்ராக்ட்!” என்றார் அவர்.

“அப்ஸ்ட்ராக்ட் என்றால்..?”

“புரியணும்,புரியக் கூடாது, தெரியணும், தெரியக் கூடாது, ஓவியத்தின் மூலம் உணர்த்த வேண்டியதை மறைமுகமாக உணர்த்தணும்”

ஸ்ரீஜித் வரைய இரண்டு நாட்கள் கொடுத்தார்.

ஹோட்டலிலிருந்து வெளியே வந்த சிவாவின் கண்களில் கொஞ்ச தூரத்தில் எதிர் நடைபாதையில் ஒரு பிச்சைக்காரன் தென்பட்டான். நெற்றியில் பட்டையாக திருநீரு, அதில் குங்குமம், இடது கையில் ஒரு சுருட்டு. அது வெறும் புகையிலையா அல்லது வேறு ஏதாவதா? அதன் பாதிப்பில்தான் சரிந்து அமர்ந்திருக்கிறானோ? கண்கள் திறந்திருந்தாலும் ஃபோகஸ் இல்லை. வலது கை ஆகாயத்தை சுட்டியது. ஒரு கோணத்தில் கழுத்து பக்கவாட்டில் இருப்பது போலத் தோன்றியது. சிவாவுக்கு சட்டென்று பொறி தட்டியது.

அவன் வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்த ஸ்ரீஜித் மஹா குஷியானார். “எக்ஸலெண்ட்! இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்.

“அது சரி இதற்கு பொருள் என்ன?”

“அதெல்லாம் பார்க்கிறவர்களுக்கு புலப்படும் விஷயம் சார்” என்று சமாளித்து விட்டான். உண்மைதானே?

115 வார்த்தைகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன