செல்லம் சேகர்- அர்த்தமுள்ள ஆன்மிகம் – 3

அஞ்ஞானமும் விஞ்ஞானமும் கொண்டது வெண்கல விளக்கு .
வெண்கலம் என்பது செம்பும் வெள்ளீயம் என்ற உலோகமும் சேர்ந்த கலவையான உலோகம் .
விளக்கு என்று வரும்போது அனைத்து தரப்பினரும் வெண்கல விளக்கையே பாரம்பரியமாக ஏற்றுவது நல்ல பலன் தரும் என்ற நம்பிக்கை உள்ளது . அடுத்துதான் பித்தளை விளக்கு . காமாக்ஷி விளக்கு பித்தளையில் இருக்கும் . கோவில்களில் வெண்கல விளக்குகள் வெண்கல மணிகள் தான் பயன்படுத்திகா படுகிறது . அதுவே சிறப்பு என வேத புராணங்கள் கூறியுள்ளது .
ஆனால் வெண்கலம் அமைதியை தந்து மகிழ்ச்சியை தரும் . பாவங்கள் தீர்க்க வல்லது . வெண்கல விளக்கு ஆன்மீக ரீதியாக அஞ்ஞானம் நீக்கி ஞானம் அளிக்க வல்லது . இதன் தீப ஒளி மன இருளை போக்கி அறியாமையை போக்குகிறது .
அறிவியல் தத்துவம் இதன் உலோக தன்மை இதை சுடர் விடும் தீப சுடர் வெப்பத்தால் நேர்மறை அதிர்வுகள் அதிகரித்து உடல் ஆரோக்கியத்திற்க்கு உதவுகிறது . இதில் எண்ணெய் ஊற்றி ஏற்றப்படும் தீபத்தால் அதன் பிரகாசம் பூஜை அறையில் ஒரு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது .. இதில் தாமிரமும் பன்னிரண்டு சதவிகிதம் வெள்ளீயம் என்கிற தகரமும் உள்ளதால் இது வெப்பத்தை உறிஞ்சி சமமாக பரப்பும் அதே நேரம் நிறம் மாறி துருவும் ஏறாது .
அதனால் சிறிய அளவிலாவது வெண்கல விளக்கினை நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றி அதன் தீப சுடரால் அஞ்ஞானமும் மெய்ஞானமும் பெறலாம் . இன்றும் கேரளாவில் பலரது வீட்டில் வெண்கல விளக்கையே பார்க்க முடியும் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன