எம் .எல் .பிரபா/மாறியது ஏனோ?


நமச்சிவாயம் கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தார். எதிரில் இருந்த நாலு கால் மண்டபத்தை சுற்றி ஒரே கூட்டம். நமச்சிவாயம் அங்கு சென்று பார்த்தார். மண்டபத்தின் நடுவில் ஒரு சாமியார் கையை மேலே தூக்கிக்கொண்டு கழுத்தை சாய்ந்தவாறு கையில் சுருட்டுடன், சன்னதியை பார்த்தவாறு வெகு நேரமாய் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

யார் இவர் ?என்று ஒருவரிடம் கேட்டார்.

“வடக்கில் இருந்து வந்திருக்கிறார் இந்த சாமியார் .இவர் சொல்வதெல்லாம் பலிக்குமாம். ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் பேசுவாராம் .அவரின் பேச்சைக் கேட்க நாங்கள் எல்லோரும் காத்துக் கொண்டு இருக்கிறோம் ” என்றார்.

தாடியுடன் ஒட்டி உலர்ந்து பல நாள் சாப்பிடாதவர் போல் தோற்றம் இருந்தது. நானும் அவரை உற்றுப் பார்த்தேன். எனக்கு அவரை எங்கேயோ பார்த்த மாதிரி தோன்றியது? யோசித்தபடியே வீட்டிற்கு நான் வந்து விட்டேன்.

வெகு நேரம் கழித்து எனக்கு ஞாபகம் வந்தது. குடும்ப கஷ்டத்துக்காக எல்லார்கிட்டயும் கடனை வாங்கிட்டு திருப்பி கொடுக்க முடியாமல் பயந்து ஊரைவிட்டு ஓடிப்போன மாரிசாமி தான் அவர் என்று.

இவ்வளவு வருஷம் கழிச்சி சாமியாராய் திரும்பி வந்து ருக்காரு. அன்று எந்த மக்களுக்காக பயந்து ஓடினாரோ? அதே மக்கள் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டு நிற்கிறார்கள் இன்று
என்ன உலகம்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன