ருக்மணி வெங்கட்ராமன்/தேடிய கண்கள்



அரச மரத்தடியில் அமைதியாக ஜடா முடியுடன் பெரியவர் அமர்ந்திருந்தார்.

அவரைக் கடந்து சென்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு
பதில் தராமல் எதிரில் உள்ள பள்ளியைப் பார்த்துக் கொண்டே இருந்தார்.
“சாமி தியானத்தில் இருக்காக.”

மாலை ஆட்டோவில் ஏறப் போன பள்ளி மாணவி “அண்ணே.! இருங்க.”
அந்தச் சிறுமி தண்ணீர் பாட்டிலையும் பழங்களையும் சாமியாருக்கு கொடுத்தாள். அதை வாங்கிக் கொண்டார்.

வீட்டிற்கு வந்ததும் தாத்தாவைப் பற்றிக் அம்மாவிடம் கூறினாள்.

அடுத்த நாள் பள்ளி சென்ற வந்தனா மாலை வீட்டுக்கு வரவில்லை. ஆட்டோகாரருக்கு போன் செய்தால் எடுக்கவில்லை.

வந்தனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மருத்துவமனையில் இருந்து போன்.”உங்க பொண்ணு மல்லிகை ஆஸ்பத்திரியில் இருக்கிறாள்.”

இருவரும் வேகமாக அங்குச் சென்றனர்.
படுக்கையில் ஒரு ஜடாமுனி. அருகில் வந்தனா.
பத்து வருடங்களுக்கு முன்னர் படகு கவிழ்ந்து உயிர் இழந்தார் என்று நினைத்திருந்த வந்தனாவின் தாத்தா.

“விபத்துக்குப் பிறகு எனக்கு எல்லாம் மறந்து விட்டது. சென்னை, வேளச்சேரி, பேத்தி ஸ்கூல் பெயர் ஞாபகம் இருந்தது. அதனால் அங்கு உட்கார்ந்து குழந்தைகளில் பேத்தியைத் தேடினேன்”

“தாத்தா மயக்கமாகக் கிடந்தார்.
அனைவரும் ‘தியானம்’ என்றனர். நான் அவர்களை மீறி ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து இங்கு சேர்த்தேன்.”

“இவள் தான் உங்க பேத்தி.”
அவர் கண்கள் பணித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன