அழகியசிங்கர்/வேற என்ன வேண்டுமெனக்கு

கை நிறையாப் பணம் இருக்கு
வாழ வசதியாய் வீடு இருக்கு
எளிமையான சாப்பாடு
தூக்கத்துடன் இருக்கு

வேற என்ன வேண்டுமெனக்கு

எனக்குக் கற்பனை
எதுவும் இல்லை
யாருடைய துணையை
நாடவும் இல்லை
எதையும் சாதிக்க
விருப்பம் இல்லை

வேறென்ன வேண்டும் எனக்கு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன