
(1)
உன்னையன்றி வேறு ஏதும் வேண்டாம்
இயற்கை கோட்பாட்டை மீறிய சிந்தனை
காதல் கற்று தந்த பாடம்
வேறென்ன வேண்டும் எனக்கு?
(2)
தாயின் கையில் ஒரு கவளம்
காதலியின் ஓர கண் பார்வை
நண்பனின் பலம் துணையாய் வாழ்க்கையில்
வேறென்ன வேண்டும் எனக்கு?
(3)
அன்பு மனைவியின் அமைதி முகம்
ஆசை மகனின் இனிய குரல்
அழகு மகளின் சிரிப்பு சத்தம்
வேறென்ன வேண்டும் எனக்கு?
(4)
படிக்காமல் சில கவிதைகள் கிடைத்தது
முயற்சிக்காமல் நல் துணை கிடைத்தது
பேணாமல் உடல் நலம் கிடைத்தது
வேறென்ன வேண்டும் எனக்கு?
(5)
எனக்காக கண்ணீர் வடிக்கும் உயிர்கள்
தேடி வரும் சில உறவுகள்
எண்ணி பார்க்கும் பல நட்புகள்
வேறென்ன வேண்டும் எனக்கு?
(6)
தனிமை துணையாக்க இனிய நினைவுகள்
மனம் மகிழ இறந்தகால கனவுகள்
அவ்வப்போது உறவுகளின் அலைபேசி விசாரிப்புகள்
வேறென்ன வேண்டும் எனக்கு?
