முனைவர் என். பத்ரி/முச்சந்தி பிள்ளையார்


சுந்தர் ஒரு பொறியியல் பட்டதாரி. 30 வயது ஆகிறது. நேர்காணல் பலவற்றிற்கு அழைக்கிறார்கள். ஆனால் குழு விவாதத்தில் இவன் வெற்றி பெறுவதில்லை. அதுதான் வேலை பெறுவதில் கடைசி நிலை. பேச்சு ஆங்கிலத்தில் அவனுக்கு கொஞ்சம் பற்றாக்குறை.
இவனுடைய வீடு முச்சந்தில் இருக்கிறது .வீட்டு வாசலில் ஒரு பிள்ளையார். எல்லோருக்கும் நல்லது செய்யும் இவர் இவனுக்கு மட்டும் இதுவரை ஒரு நல்ல வழி காட்ட வில்லை .அதனால் அவர் மீது அவனுக்கு மிகுந்த கோபம். வீட்டு வாசலில் இருக்கும் அந்த பிள்ளையாருக்கு ஒரு நாளும் இவன் நமஸ்காரம் செய்ததில்லை. இன்று என்னவோ காலையில் எழுந்த உடனே குளித்துவிட்டு சுத்த பத்தமாக பிள்ளையாரிடம் போய் வேண்டிக் கொண்டான்,’ இன்று எனக்கு வேலை கிடைக்க வேண்டும். இல்லையென்றால் உன்னுடன் இனிமேல் ஜென்மத்துக்கும் பேசவே மாட்டேன்’ என்று. காலை 10 மணிக்கு அவனுக்கு ஏற்கனவே நேர்காணல் பங்கு கொண்டிருந்த ஒரு கம்பெனியிலிருந்து பதவி அமர்வு ஆணை வந்தது. இது முச்சந்தி பிள்ளையாரின் கருணையா அல்லது எதார்த்தமாக நடந்ததா என்ற மனித யோசனையில் மூழ்கிக் கொண்டிருக்கிறான் அவன் . அவனுடைய வீட்டு வாசலில்,’ கடவுள் இருக்கான் குமாரு’ என்று எழுதி இருந்ததை பார்த்தான். இதுவும் இயல்பாக நடக்கிறதா? தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். இனி அவனுக்கு நல்ல காலம் தான்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன