அதிரன்/மீதம்

நிழலில்
சிகை பார்த்து
நீட்டியும் மடக்கியும்
சீர் செய்து கொள்கிறது 
அகவை எழுபதை
தொட்டிருக்கும் 
அந்த தானியங்கி
வங்கி இயந்திரக்
காவலாளின்
மீதமிருக்கும் இளமை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன