
“அது என்ன பெயர் விலங்கு விநாயகர் ?”. அர்ச்சகரிடம் கேட்டான் பூபதி.
“தம்பி! அது விலங்கு விநாயகர் இல்லை. விளங்கு விநாயகர். கை கால் செயலிழந்த நோயாளிகள் இங்கு வந்து வேண்டிக் கொண்டு, அருகில் இருக்கும் குளத்தில் இருந்து தினசரி 50 குடம் தண்ணீர் எடுத்து இந்த விநாயகர் தலையில் ஊற்றினால் அவர்கள் கை கால்கள் சரியாகும்”
“இது என்ன மூடநம்பிக்கை?” என்றான் பூபதி.
“மூடநம்பிக்கை இல்லையப்பா.. இது பிசியோதெரபி” என்றார் அர்ச்சகர்.
