எம்.எல்.பிரபா/விநாயகர் தந்த பரிசு


அன்று விநாயகர் சதுர்த்தி .ஊர் தலைவர் மாணிக்கம் வருடா வருடம் இந்த விழாவை சிறப்பாக நடத்துவது வழக்கம்.
10 கிலோ மாவை தூக்க முடியாமல் கோவிலுக்குள் எடுத்து வந்தார். மாவை குருக்களிடம் வைத்துவிட்டு, கை வலித்ததால் கையை வேகமாக உதறினார். விரலில் இருந்த மோதிரம் கீழே விழுந்தது. தேடிப் பார்த்ததில் எங்கும் கிடைக்கவில்லை. “ஒருவேளை இந்த மோதிரம் மாவுக்குள் விழுந்திருக்கலாம், நான் மாவு பிசையும் போது கிடைத்தால் கொடுத்துவிடுகிறேன்” என்றார் குருக்கள். சரி, சரி நான் விநாயகரிடமே விட்டுவிடுகிறேன். “யாருக்கு இவர் தர நினைக்கிறாரோ அவர்களுக்கு போய் சேரட்டும்.
இதையும் என் செலவு கணக்கில் எழுதிக் கொள்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே சென்றார்.

குருக்கள் பெரிய கொழுக்கட்டை செய்து நாலு சிறிய மோதகமும் செய்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்தார். பக்தர்கள் எல்லோருக்கும் கொழுக்கட்டையை, புட்டு புட்டு பிரசாதமாக கொடுக்கப்பட்டது. எல்லோரும் சாப்பிட்டு நன்றாக உள்ளது என்று சொன்னார்கள். ஆனால் மோதிரம் யாருக்கும் கிடைத்ததாக கூறவில்லை. மீதி இருந்த நாலு மோதகங்களை மட்டும் குருக்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.அவருடைய சிறிய மகன் ஓடிவந்து ஒரு மோதகத்தை எடுத்து கடித்தான் .அதில் மோதிரம் மாட்டியது. அப்பாவிடம் கொடுத்தான். குருக்கள் உடனே தலைவருக்கு போன் செய்தார்.”மோதிரம் கிடைத்துவிட்டது” என்று.

“நீங்கள் கஷ்டப்பட்டு பூஜை செய்ததற்கு விநாயகர் உங்களுக்கு கொடுத்த பரிசு அது, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் மாணிக்கம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன