
கணேசன் பிறந்து இன்றோடு நாலரை வயது ஆகிவிட்டது . அவனுக்கு பள்ளிக்கூட அட்மிஷன்க்கு சரோஜா இன்று ஸ்கூல் போய் இருக்கா.
பள்ளிக்கு சென்று வந்த சுப்பிணி மகன் கணேசன் “ஒரு பள்ளியிலும் என்னை சேர்த்து கொள்ளவில்லை, அப்பா , நிறைய பணம் வேண்டுமாம் …அம்மா english பேசணுமாம் , நீயும் கூட வரணுமாம் . ஏன் அப்பா இப்படி கேக்கறா, “என்று துளைத்து எடுத்தான் .
ஒரு ஏழை குருக்கள் சுப்பிணி . அவர் மனைவி ஒரு ஐந்து பேருக்கு முழு நாளைக்கும் உண்டான சாப்பாடு செய்து கொடுத்து வருமானம் ஈட்டுகிறாள். மிக அழகா கை வேலை , கோலம், பொம்மை செய்தல் என அனைத்தும் தெரிந்தவள் . ஆனாலும் வாழ்வு சிறக்கவில்லை.
தினமும் சுப்பிணி பூஜை செய்யும் கோவில் பிள்ளையாருக்கும் அவள் தான் நெய்வேத்தியத்திற்கு அன்னம் தருகிறாள் .
என்னதான் வைதீகம் தெரிந்தாலும் அவர் வருமானம் சற்று குறைவே .
அப்போது வந்த அடுத்த தெரு அம்மன் கோவில் பூசாரி கந்தன் “சுப்புணி நாளைக்கு பெரிய தெரு ராஜப்பா வீட்டுல மாடி ரூம் போட்டதுக்கு பிள்ளையார் பூஜை போடணுமாம் நீ போய் போட்டுட்டு வந்துடு …சீக்கிரம் கோவில் பூஜையை முடித்து விட்டு அங்கே போய் வா ” என்றான்
“ சரி “என்றார் .
மறு நாள் கோவிலில் பூஜை முடித்து விட்டு சற்று நேரம் மனைவியையும் மகன் கணேசனையும் கோவிலில் உட்காரச் சொல்லி விட்டு பெரிய தெரு ராஜப்பா வீட்டுக்கு சென்றார்.
“ராஜப்பா சார் ஒரு அரசு கல்வி அதிகாரி . அதிலும் பள்ளிக்கூடங்களுக்கு மேல்பார்வை பார்க்க செல்பவர் “ என்று அவர் வீட்டு விசேஷங்களுக்கு சமைக்க செல்லும் சுப்புணி மனைவி கூறினாள்.
“அப்படியா”
“ஒரு முறை ஒரு மாணவன் ஏதோ அதிகாரி கையெழுத்திற்கு ராஜப்பா சார் வீட்டுக்கு போய் வந்ததை பார்த்தேன் . அவர் பெரிய போஸ்டில் உள்ளார் ஒரு வார்த்தை வேண்டுமானால் அவரிடம் கேட்டு நம் மகனுக்கு பள்ளிக்கூட இடம் வாங்கி கொடுங்களேன். “
“சும்மா இரு பூஜைக்கு செல்லும் இடத்தில அவர்களுக்கு தர்ம சங்கடம் கொடுக்க மாட்டேன்”
ஆனாலும் உள் மனதில் இந்த முறை சரோஜா சொன்னது போல் அவரிடம் கேட்கலாமா என்று யோசித்தபடியே ராஜப்பா வீட்டிற்கு சென்றார்.
மிக நேர்த்தியாக அங்கே பூஜை செய்து அவர்களிடம் சம்பாவனை பெற்று கொண்டு கேட்பதா வேண்டாமா என்று யோசித்த வேளையில் ராஜப்பா சார் பேரன் விதுரன் மிக அழகாக தனது பிள்ளையார் பொம்மை ஒன்றை வைத்து கொண்டு
“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் நீ எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா ” என்று சொல்லி கொண்டு இருந்தான்.
தன் மனதில் இருப்பதை கேட்க இது நல்ல தருணம் என்று தோன்ற
“நீ கேட்பதை உனது தாத்தாவால் நிச்சயம் குடுக்க முடியும் என் மகன் கணேசனுக்கு அந்த பிள்ளையார் தான் தர முடியும் “ .
உடனே அந்த சிறுவன் “இந்த பிள்ளையார், பொம்மை பிள்ளையார் எங்க அம்மா சரோஜா ஆண்ட்டி கிட்டேந்து வாங்கினது …ஆனால் அவங்க வீடு கிட்டே இருக்கிற நிஜ பிள்ளையார் அனைத்தும் கொடுப்பார்.”
சரோஜா ஆண்ட்டி “என் மனைவிதான் … என்ற குரல் கேட்டு சிறுவனின் தாய் மீரா வந்து “ஓஹோ நீங்கள் சரோஜாவின் கணவரா எனக்கு தெரியாதே .. சரோஜா செய்யும் அனைத்து கைவேலைகளும் எனக்கு பிடிக்கும் . இந்த பிள்ளையார் செய்து கொடுத்ததும் அவங்கதான் . கணேசனையும் நான் பார்த்து இருக்கிறேன் . அவன்தான் என் மகன் விதுரனுக்கு இந்த பிள்ளையார் சுலோகம் சொல்லி கொடுத்தவன் “.
“அவனைத்தான் நல்ல பள்ளிக்கூடம் சேர்க்க பாடுபடுகிறோம்”
“நீங்கள் கவலை படாதீர்கள் … உங்க மகனுக்கு அருகில் உள்ள நல்ல பள்ளியில் நாளைக்கே இடம் வாங்கி தருகிறேன்” என்று கூறினாள் .
நன்றி கூறி விட்டு திரும்ப கோவிலுக்கு சென்று மனைவி மகனிடம்
” உனது பொம்மை பிள்ளையாரும் உன் மகனின் நிஜ பிள்ளையார் மந்திரமும் சேர்ந்து அடுத்த வாரம் முதல் நம் மகன் கணேசனுக்கு பள்ளி கூடத்தில் SEAT வாங்கி கொடுத்து விட்டது “என்றார்.
கணேசனுக்கு மிக மிக சந்தோஷம் .
“அப்பா எனக்கு இன்னும் ஸ்லோகங்கள் சொல்லிக் கொடுங்கள்,” என்றான்.
பொம்மை பிள்ளையாராக இருந்தாலும் பொறுத்த வரை கல்வி வரம் வாங்கி தந்த உண்மை கடவுளே !!
