தி.வள்ளி/ராசி நல்ல ராசி



அம்மா போய்ச் சேர்ந்து காரியமும் முடிஞ்சாச்சு. இருப்பதை செட்டில் பண்ணிட்டு அண்ணனும், தம்பியும் கிளம்ப வேண்டியது தான்.

கணேஷும், சுப்பிரமணியமும் ஒற்றுமையானவர்கள் தான். மூத்த மருமகள் சுஜாதா சொத்துக்கு ஆசைப்படுபவள்.

“ஏங்க அத்தையோட வெள்ளி பாத்திரத்தையும் கையோடு பிரிச்சிட வேண்டியதுதானே”

சுப்பிரமணியமும் “அண்ணி சொல்வது சரிதானே” என்றான்.

வெள்ளி பாத்திரங்களை இரண்டாக பிரித்தனர். கடைசியாக ஒரு சின்ன வெள்ளி கிண்ணம் மட்டும் பாக்கியிருந்தது.

சின்னவள் வசந்தா “அத்தை தினமும் கும்பிடும் கல் பிள்ளையாரை இதற்கு இணையாக வைக்கலாம்” என்றாள்.

“அது எப்படி வெள்ளிக்கு கல் பிள்ளையார் இணையாகும்? எனக்கு வெள்ளிதான் வேணும்” என்றாள் மூத்தவள்.

“சரியக்கா நீங்க கிண்ணத்தை எடுத்துக்கோங்க நான் பிள்ளையாரை எடுத்துக்கிறேன்”

ஊர் திரும்பும் போது சுப்பிரமணியம்
“வெள்ளிய அண்ணிக்கு விட்டுக் கொடுத்துட்டு பிள்ளையாரை எடுத்துட்டு வந்திருக்க. அதுவும் இதுவும் மதிப்பில ஒன்னாகுமா?”

“இது அத்தைக்கு அவங்க மாமியார் கொடுத்ததுங்க. மூன்று தலைமுறையா பூஜை பண்ணுனது. இந்த விநாயகர் சக்திக்கு எதுவும் ஈடாகாது” என்றாள்.

அடுத்த வருடம் அத்தையின் முதல் திதி.. சுப்பிரமணியம் வீடு, கார் வாங்கி அமோகமாக முன்னேறியிருந்தான்.

அவன் தாய்மாமா “எல்லாம் அக்கா கும்பிட்ட பிள்ளையார் ராசி” என்று கூற மூத்தவள் மயங்கினாள்.

வார்த்தை எண்ணிக்கை : 122

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன