“அதிக விலை சொல்கிறீர்கள். “ “இல்லை ஐயா.. சரியாகப் பாருங்கள். இது கற்சிலையோ, மரத்தால் செய்யப்பட்டதோ அல்ல. ஓர் அபூர்வ உலோகத்தால் செய்யப்பட்டது. இந்த உலோகம் இதுவரை கண்டறியப்படாத ஒன்று.” “என்ன?” “ஆமாம் .. உள்ளூர் பேராசியர் ஒருவர் கூட முயற்சித்தார். உலோகத்தின் தாதுவைக் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த உலோகத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது. பால் இதில் படும்போது கருநீலமாய் மாறுகிறது. அது ஒரு மருந்தா அல்லது விஷமா எனத் தெரியவில்லை.” “யாருக்கேனும் கொடுத்துப் பார்க்கலாமா?” “அவர் இறந்து விட்டால் .. கொலைப்பழி விழுமே.?” “ஓ!” “பாலை இதன் மேல் ஊற்றுகிறேன் பாருங்கள்..” “கடவுளே.. இப்படி ஒரு நிறத்தில் எந்த திரவத்தையும் பார்த்ததில்லை.. நானே குடித்துப் பார்க்கவா?” “ஐயோ வேண்டாம்.. உங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால்..” “பரவாயில்லை.. நான் குடிக்கப் போகிறேன்..” “ஐயா.. ஐயா.. ஏன் இப்படி வினோதமாகப் பார்க்கிறீர்கள்” “என் கண்முன் பல காட்சிகள் விரிகின்றன. நீ இறக்கப் போகும் தினம் தெரிகிறது..” “ஐயோ… எப்போது இறக்கப் போகிறேன்?” “இன்னும் பத்து நிமிடங்களில்…”