
குற்றாலம் சென்று, சிற்றருவி தாண்டி தேனருவி மற்றும் பாலருவி தாண்டி, குடுமி மலை சித்தரை பார்த்தார் கணபதி.
“சாமி, வியாபாரம் இருபது வருடங்களாக நன்றாக சென்று கொண்டிருந்தது. தற்போது மோசமாகிக்கொண்டு வருகிறது. உபாயம் சொல்லுங்கள்.”
“உன்னுடைய கடையின் பின்பக்கம் உள்ள சரக்கு அறையை நீ பார்க்கவேயில்லை. சென்று பார். மூன்று வருடங்களுக்கு முன்பு, மூன்றாம் தெருவில் இருந்த முச்சந்தி விநாயகரை திருடிக்கொண்டு வந்து அந்த அறையில் போட்டு விட்டு சென்ற திருடன் ஒரு விபத்தில் இறந்து விட்டான். தன்னை அண்டியவர்களுக்கெல்லாம் அருள் பாலித்த விநாயகர் தற்போது அடைபட்டுக்கொண்டு இருக்கிறார். விநாயகரை வெளியில் கொண்டு வா. சிறிய கோவில் கட்டி வழிபடு. பிறகு பார்.”
ஊருக்கு வந்த கணபதி விநாயகரை வெளியில் எடுத்தார். ஒரே வாரத்தில் கடையின் அருகில் ஒரு சிறிய கோவில் கட்டி பூசைகள் செய்யத்தொடங்கினார். பக்தர்கள் வர ஆரம்பித்தனர். மூன்றே மாதங்களில் விநாயகர் பிரபலம் ஆனார். வெளியூரில் இருந்து பக்தர்கள் வர ஆரம்பித்தனர். நான்கு வருடங்கள் அடைபட்டுக்கிடந்த விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கத்தொடங்கினார்.
கணபதியின் இரும்புக்கடை விரிவாக்கம் செய்யப்பட்டது. நான்கு மாடி கட்டிடத்தில் தற்போது வியாபாரம் அமோகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.
(127 words)
