
பிள்ளையார் அரசமரத்தடியில் இருப்பார். பிளாட்களில் வாசலில் ஒரு பிள்ளையார் கோயில் மாதிரி அமைத்திருப்பார்கள். அம்மாதிரி ஒரு பிள்ளையார் இந்த முச்சந்தியில் இருந்தார். போவோர் வருவோர் பார்த்து கும்பிட்டு போவார்கள். யாரும் கவனிக்கவில்லை என்ற எண்ணம் பிள்ளையாருக்கு இல்லை. அந்த வழியாக தினமும் சைக்கிளில் புட்டு விற்பவன் காலை 8/00மணிக்கு ஒரு கும்பிடு, புட்டு அத்தனையும் விற்றதும் திரும்ப வீட்டுக்கு போகும் போது ஒரு கும்பிடு பிள்ளையார் காலடியில் ஒரு ரூபாய் வைப்பான். அந்த ரூபாயை கொஞ்ச நேரம் பொறுத்து வரும் யாரும் பார்க்கிறார்களா என்ற பயத்துடன் ஒரு சிறுவன் எடுத்துக்கொண்டு போவான். இந்த செய்கை அவனுக்கு தப்பாகத்தோன்றவில்லை.பிள்ளையார் சதுர்த்தி வரும்நாளன்று அந்த சிறுவன் அதுநாள் வரை சேர்த்து வைத்த ரூபாயில் பிள்ளையாருக்கு பூமாலை சாற்றி பழங்கள் வைத்து விட்டு ஒடி விட்டான்.அந்த சமயத்தில் பிள்ளையார் ஒருசிரிப்பு சிரித்த மாதிரி சிறுவனுக்குத் தோன்றியது. யார் இதை செய்தது என்ற விவரம் தெரியாமல் எல்லோரும் முழித்தார்கள்.
104 words

recall on in day to day reality devotees sentiments , Super 🪂 💐