
இட ஒதுக்கீட்டால்
மதிப்பிழக்கும் திறமை
என்றுரைப்போர்க்கும்
சமைப்பதும் துவைப்பதும்
ஆண்மைக்கிழுக்கென நினைப்போர்க்கும்
தன் வீட்டை சுத்தப்படுத்தும்
பணியாளுக்கு
தனிக் கோப்பையில்
தேநீர் தருவோர்க்கும்
பாதுகாப்புடையின்றி
சாக்கடையில் இறங்கும்
கூலித் தொழிலாளியை பற்றி
அறிந்தும்
அறிய விரும்பாதிருப்போர்க்கும்
உண்டோ உரிமை
பாரதியை கொண்டாட

அருமை.நியாயமான கேள்வி.