மாதங்கி வி/இந்தப் படம்

இந்த படம் ஒரு மிகப்பெரிய கலைக்கூடத்தில் விற்பனைக்கு இருந்தது. அங்கும் இங்குமாக பார்வையாளர்கள் மற்ற படங்களை பார்த்து ரசித்து வாங்கினர். ஆனால் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் இந்த படத்தின் முன் நின்றபடி ரசித்துக்கொண்டிருந்தான். ஒரு முதியவர் அவனிடம் “என்ன? இதை இன்னும் எவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டே இருப்பாய்?” என்று கேட்டார்.
நான் வியந்து “நிற்கிறேன் தாத்தா. இதில் மூன்று வகையான கலைஞர்களின் திறமை அடங்கியுள்ளது. முதலில் சிற்பி. நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இரண்டாவது அதை படம் பிடித்தவர். அந்த சிற்பியின் கலையை தனது புகைப்படத்தில் அழகாக காண்பித்து உள்ளார். மூன்றாவது ஓவியர். மங்களம் நிறைய சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள். பிரமாதம்.” என்றான்.

“அந்த மூன்று கலைகளும் நிறைந்தவர் நானே” என்றார் முதியவர். “என் சிறுவயதில் நான் சிற்பியாக இருந்தேன். இப்போது வயதாகிவிட்டது. அதனால் இப்படி படம் பிடித்து வரைகிறேன்.”

வியந்தான் மாணவன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன