வே. கல்யாண்குமார்/முட்டையா கோழியா..

முட்டை ஓடு உடைந்ததே..
கோழி குஞ்சு பிறந்ததே!
வட்ட நிலா வானிலிருந்து
வாழ்த்துதம்மா கவியிலே! 

அம்மாக்கோழி தேடுதம்மா
அடுக்களையின் மேட்டிலே
சும்மா சும்மா சுத்துதம்மா
கோழிக்குஞ்சு  குஷியிலே!

இம்மாத்துன்டு கோழிக்குஞ்சு
அம்மாவினைத் தேடயிலே.
இங்கும் அங்கும் பார்த்தபடி
நடக்குதம்மா கொல்லையிலே!

கோழிகளின் வாழ்வினிலே
காலநேரம் ஏதுமில்லே..
கோழிக்கறி யாகிவிட்டால்
பறப்பதற்கும் சிறகுயில்லே!
~~~~*

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன