பி.ஆர்.கிரிஜா/தாமதம்

கடுமையாய் என்னை முறைத்தாய் ;
என்னை முறைத்து என்ன பயன் ;
பால்காரர் தாமதம்
பணிப்பெண் தாமதம் ;
வீட்டில் அனைவரும்
தாமதம்
பேருந்து தாமதம்
அலுவலக மின்தூக்கி தாமதம்
அனைவருமே தாமதம்
நான் மட்டும் விதி விலக்கா என்ன ;
தாமதமே
வாழ்க்கை ஆகிப் போன பின்
முறைத்தல் ஏனோ;
கடைநிலை ஊழியர் முணுமுணுப்பு என் செவியில் ;
அவரும் பத்து நிமிடம் தாமதம்தான் !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன