
நான் வேலைக்கு
கிளம்பும்போதெல்லாம்
எதிரில் வரும்
ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்
அந்த எழுபது வயது அம்மா
இன்று வரவில்லை..
மாறாக ஆடுகள் மட்டுமே
என் எதிரில் வந்தன..
அந்த அம்மாவின் சத்தத்தில்
எப்போதுமே ஆடுகள்
குழு வரிசையாக செல்வது வழக்கம்..
இன்று அப்படி இல்லை..
சற்று உற்று நோக்கினேன்..
ஆடுகள் முழுவதும்
அந்த எழுபது வயது அம்மாவின்
வயது முதிர்ந்த கோடுகள்..
இப்போது ஒவ்வொரு ஆடும்
என்னை உற்று நோக்கின
அந்த அம்மாவாக..
இப்போது நான் அவ்வம்மாவின்
பழுப்பு நிற
ஒரு செம்மறி ஆடானேன்!
