ஹர ஹர சம்போ மகாதேவா/ஆர்.வி.சுரேஷ்

மனம்

அத்தனைக்கும்
ஆசைப்படும் மனதை
வேடிக்கை பார்த்துக்கொண்டே
இருக்கும் சிவம்
..
மனம்
சிவத்திடம் வராமல்
சிவத்தால்
மனதிற்கு
என்ன செய்ய முடியும்..???
..
மனதின் விதி
மனம்
எதில் பதிகிறதோ
அதுவாகவே
மனம் ஆகும்
..
மனதின் பலம் அதுதான்
மனதின் பலவீனமும் அதுதான்

மனதை
சிவத்திடம்
பதியை வைப்பதற்காகவே
பக்தி மார்க்கம்

அதற்க்காக
மனதை
பக்குவப்படுத்தவே
யோக மார்க்கம்

ஞானமார்க்கம் செல்லாமல்
தனக்குள்ளே
தனக்கு வெளியே
என்ன என்ன நடக்கிறது
என்பதை
அறியாமல்
எந்த மார்க்கத்தாலும்
பலன் இல்லை

எதிலும் பதிந்து விடும் தன்மை
சிறகடித்து பறக்கும் தன்மை
ஆன்மாவிற்கு இல்லை
காரணம்
ஆன்மாவே மூலம்

மூலத்தின் குழந்தை மனம்
பதிந்து விடும் தன்மை
அது மனதின் கைவசம்

நான்கு காலில் நடப்பதும்
கூடு விட்டு கூடு பாய்வதும்
காற்று இல்லாத இடத்திலும்
பால் வெளியில் பறந்து திரிவதும்
மனதிற்கே
இயற்கை கொடுத்த வரம்

அத்தனையையும்
ஒரு நேர்கோட்டில்
இணைக்கும் சக்தி
மனதிற்கு உண்டு

மனம்
தனித்து இயங்கினால்
அது மனம் மட்டுமே

மனம்
ஒரு உடலோடு ஒத்து
உடலோடு இணங்கி போனால்
அது யாகம் யோகம்
உடல் கல்பம் ஆகும்

மனம்
அறிவோடு இணங்கி போனால்
மனம்
ஞானமாகும்

மனம்
விகாரங்களோடு
இணங்கி போனால்
அசுரன் ஆகும்

மனம்
சிவத்திடம் அடங்கி போனால்
மனமே
சிவமாகும்

ஓம் நமசிவாய
என்ற மனதிற்கு முக்தி
ஓம் சிவாய நமக
என்ற மனதிற்கு நீண்ட ஆயுள்

எதை
மனம் தேடுகிறதோ
அது
கிடைத்தே தீரும்

ஓம் நமசிவாய…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன