அரியூர் ரேணுகா நாராயணன்/உழைப்பே உயர்வு

சிறு கிராமத்து வீடுகள் நிறைந்த வீதியில் மெல்லிய சூரிய வெளிச்சம் பரவியது. தலையில் வண்ணம் தீட்டப்பட்ட துர்கா விக்கிரகங்கள் நிரம்பிய மூங்கில் கூடையை நேர்த்தியாகச் சுமந்துகொண்டு விரைவாக நடந்தாள் கௌரி. அவளது இடுப்பில் அமர்ந்திருந்த ஐந்து வயது மகள் அனன்யா, கையில் சிறிய திரிசூலத்தை உறுதியாகப் பிடித்தபடி தெருவின் அசைவுகளைக் கூர்ந்து கவனித்தாள்.

​சிற்பியான தந்தையின் வயோதிகம் காரணமாக அவரின் பாரம்பரிய கலைத் தொழிலை விடாமல் கையில் எடுத்தவள் கௌரி.

திருவிழாக் காலம் தொடங்கியதால், புதிய ஊடர்களுக்குச் சிலைகளை விநியோகிக்கும் பொறுப்பு முழுமையாக அவள் தோள்களில் சுமத்தப்பட்டது.

​வழியில் சென்றவர்கள் அவளை ஆச்சரியத்துடன் பார்த்தனர். தலையில் அலங்கரிக்கப்பட்ட தெய்வம் ஒருபுறம்; கையில் மகளோடு வாழ்வாதாரத்திற்காக நடைபோடும் உண்மையான சக்தி மறுபுறம்.
​”அம்மா, இந்தக் கூடை ரொம்ப கனக்குதா?” என்று அனன்யா மழலைக்குரலில் கேட்டாள்.

​கௌரி புன்னகைத்து, “உன் கையில் இருக்கும் திரிசூலத்தின் தைரியம் தான் என் மனதிற்கு வலிமை, மகளே” என்றாள்.

​வாழ்க்கைப் போராட்டத்தை வெல்லும் நிஜமான தெய்வீகம், அவளது சுயமரியாதையிலும் உழைப்பிலுமே பிரகாசித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன