தாணப்பன் கதிர்/பதுமை

      யாரு என்ன சொன்னா என்ன?  நான் அவரோடு சேர்ந்து போயிட முடியாதில்ல. குடி.. குடி.. குடிச்சி குடிச்சே போய்ச் சேர்ந்திட்டார்.

    நமக்கு இது வேண்டாம் மாமா. நமக்குன்னு ஒண்ணு அழகா பொறந்திருக்கு. குடிக்காதே மாமான்னு எத்தனை வாட்டி தலைப்பாடா அடிச்சிருப்பேன். கேட்டிருக்கலாம்ல்லா.

    என்னைக் கூட்டிட்டு போய் வைச்சிக்கிடுவதற்கு அம்புட்டு யோசனையா? மூழியை வீட்டுக்குள்ளே வைச்சிக்கிட முடியுமான்னு சாம்பல் கரைச்சிட்டு வந்ததுமே பேச ஆரம்பிச்சிட்டாங்களே.

   உனக்கு கைப் பொம்மைல்லாம் செய்ய வருமே, அதை ஏன் செய்ய மாட்டேங்கே? என்று நீ அடிக்கடி கேப்பியே மாமா. இதுக்குன்னு தெரியாமப் போச்சே மாமா.

   கைக்குழந்தை வாசவிக்கு அழகழகாய் குட்டிக் குட்டிப் பொம்மைகள் இருக்கு. ஆனா பாரு அம்மன் கைல இருக்கச் சூலாயுதந்தான் வேணும்ன்னு ஒரே அடம்.    

    குழந்தை வேலப்பருக்கு ஆத்தா கொடுத்ததைப் போல நானும் கொடுத்தேன். இப்போ என் இடுப்புல இருக்கிற அவ தனக்கென்று ஒண்ணு வந்தா கொற்றவையா மாறிடமாட்டாளா என்ன?

   ‘பொம்மை.. பொம்மை, கைப்பொம்மை’ என்று கூவிக்கொண்டே போகிறாள் வசந்தி.

   தலைச்சுமை மண் பொம்மைகள் அங்குமிங்குமாய் ஆடாமலிருக்க வைச்சிருக்கிற தாளின் சலசலப்பை மீறித் திமிறி நின்று உலகைப் பார்த்து ஏளனம் செய்தன. 

121 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன