
செல்வன் ஒரு YouTube சேனலில் வேலை செய்து வருகிறான், அவனுடன் உரையாடும் அவன் நண்பன், “இன்றைக்கு என்னடா புதுசாசொல்லபோற?” என்று கேட்டான்.
“இன்னைக்கு வரும் வழியில ஒரு புகைப்படம் ஒன்னு பார்த்தேன். அது என் கண்களிலே நிற்கிறது. அதைப் பற்றி நான் சொல்ல போறேன்டா இன்னைக்கு” என்றான்.
இந்த புகைப்படத்தைப் பார்த்து, செல்வம் என்ன சொல்கிறான் மக்களுக்கு என்று
கேட்போம்.
இடுப்பில் குழந்தையை ஏந்தியபடியும், தலையில் பொம்மைகளைக் கூடையாகச் சுமந்தபடியும் நிற்கும் இந்தப் பெண்மணியை நான் இன்று நேபாளில் பெருவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளையும் மக்களையும் மீட்கும் பெண்களின் உருவமாகப் பார்க்கிறேன்.
பெற்றோரைப் பிரிந்து தவிக்கும் பிஞ்சுகளை அரவணைத்து, உணவூட்டி, மருந்தளித்து, தாயாக மாறும் அந்த வீராங்கனைகளின் பொறுப்பு அளப்பரியது. பெருவெள்ளத்தில் உயிர் தப்பிய அந்தக் குழந்தைகள் தெய்வத்தின் வடிவங்கள் என்றால், அவர்களைக் காப்பாற்றும் இப்பெண்கள் சக்தியின் வடிவங்கள். இந்தப் பெண்மணியின் தலையில் இருப்பது வெறும் பொம்மைகளல்ல; பெருவெள்ளத்தில் இருந்து உயிருடன் மீளப்போகும் தெய்வங்கள். அவர் ஏந்துவது வெறும் குழந்தையல்ல; எண்ணற்ற உயிர்களின் எதிர்காலம். அவர்களின் தோள்களில் இருக்கும் பொறுப்பு-பல உயிர்களைக் காப்பாற்றும் மனிதநேயத்தின் மகத்தான சுமை!
124

வித்தியாசமான கதை மாற்றி யோசிச்சு எழுதியது. அருமை