
“உஸ்.. அப்பாடா என்னமா இருக்கு, சென்னை வெயில்?”
“ஏன், என் சக்களத்தி கங்காதேவி கூட வரலையோ? ஐயாவை எப்பவும் குளு குளு..ன்னு வச்சுப்பாளே?”
“அவள வம்புக்கு இழுக்கலைனா, உனக்குப் பொழுதே போகாதே. அந்த கொழந்தையக் கவனி. பசியோடு வருது. என்னை மாதிரி கையில, ஒரு சூலத்தை வேற கொடுத்து, சுமக்க வச்சிட்டாங்க, பாவம்”
“அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன். அடுத்த தெருவுல ஒரு பாட்டி திண்ணைல வச்சு சோறு கொடுக்கும். அப்படியே நீங்களும் கொஞ்சம் வெயில் தாழ உக்காரலாம். குளிர் பிரதேசத்துக்காரர் ஆச்சே. என் புருஷன் கருத்துப் போயிடக்கூடாது இல்லியா?”
“அக்கறை..னா அன்னபூரணிதான்! என் பெண்டாட்டியாச்சே”
“கன்னத்தைக் கிள்ளாதீங்க. நல்லவேளை நம்ம பசங்களும் கூ(டை)ல வரல”
என்றாள் பார்வதிதேவி வெட்கத்துடன்.
80 WORDS
