அழகியசிங்கர்/நடிப்பு

“மேடம், கொஞ்சம் நடங்க மேடம்,”

“முடியாதுப்பா..இந்தப் படமே வேண்டாம். நான் நடிக்கவே இல்லை..”

அவள் தூக்கிக் கொண்டிருந்த குழந்தை அழ ஆரம்பித்தது.

குழந்தையின் உண்மையான அம்மா

குழந்தையை நடிகையிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.

 நடிகை பெருமூச்சு விட்டாள். பொம்மையை விற்க எப்படி இந்தப் பெண்கள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள் என்று ஆச்சரியமாய் இருந்தது நடிகைக்கு.

எப்படியோ சமாளித்து விட்டாள் நடிகை. படம் ரிலீசு ஆகிப் பல நாட்கள் நல்ல வசூல். பத்திரிகைக்காரர்கள்  கொலு பொம்மைகளுடன் குழந்தையையும் தூக்கிக் கொண்டு போகிற காட்சி பிரமாதம் என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்கள்.

அந்தப் படத்தை டைரக்ட் செய்தவருக்கு அந்தக் காட்சியை எடுத்தபோது நடிகையின் வசவுகளை எவ்வளவு தாங்கிக் கொண்டார் என்பது யாருக்குத் தெரியும்?

77 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன