பி.ஆர். கிரிஜா/நம்பிக்கை

ஏ ஐ தொழில் நுட்பம் கொண்டு வரைந்த படத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரமேஷ். ரம்பை, ஊர்வசியை சினிமாவில் மட்டுமே பார்த்ததுண்டு. இப்போது விதம் விதமாக ரம்பைகளை உருவாக்கலாம். அந்தப் பெண்ணின் இடுப்பில் இருந்த மூன்று வயது பெண் குழந்தை தெய்வாம்சம் பொருந்தி இருந்தது. இத்தனை மண் பொம்மைகளையும், ஒரு பெண் குழந்தையும் எப்படி இவளால் சுமக்க முடியும்?           தேவலோகத்திலிருந்து பார்வதி தேவியே மண்ணுலகத்திற்கு இறங்கி  வந்து விட்டாளோ!

சினிமா டைரக்டரான ரமேஷிற்கு ஒரு ஐடியா தோன்றியது. இதே மாதிரி பல  படங்களை ஏ ஐ தொழில் நுட்பம் கொண்டு உருவாக்கி ஒரு அனிமேஷன் படம் தயாரித்தால் சூப்பர் டூப்பர் சக்சஸ் ஆக வாய்ப்பு அதிகம். அவன் அப்பாவே சினிமா டைரக்டர் ஆனதால் பணப்  புழக்கம் அதிகம். உடனே தன்னுடைய கோ டைரக்டரை அழைத்து பேச முடிவு செய்தான்.

   “சிவா, நான்தான் ரமேஷ் பேசறேன். வாட்ஸ்அப்ல உனக்கு ஒரு படம் அனுப்பறேன். இதைப் பற்றி உன்னோடு டிஸ்கஸ் பண்ணனும். இன்னிக்கு  மாலை ஐந்து மணிக்கு என் வீட்டுக்கு வா” என்றான்.

” ஷூவர் டா, ஐ வில் கம்” என்றான் சிவா.

இந்தப் படம் எடுத்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று, தானும் தன் அப்பா மாதிரி ஒரு பெரிய  கோடீஸ்வரன் ஆகும் கற்பனையில் தன் காதலி மாலினியைப் பார்க்க ராயல் என்ஃபீல்ட்  புல் லட்டில் பறந்தான் ரமேஷ்.

152

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன