ருக்மணி/சூலத்தை ஏந்தியவள்

“கமலா.! வாசலில் எதோ சத்தம் கேட்கிறது. என்ன என்று பாரு.” என்று மருமகளைக் கூறினார்.

மருமகள் “அத்தை.. பொம்மை விக்கற பொண்ணு.”

“கூப்பிடு.”

“பொம்மை” என்று அழைத்ததும் வந்தாள் ஒரு இளம் வயது அழகான பெண். இடுப்பில் ஒரு பெண் குழந்தை. தலையில் விதவிதமான மண் பொம்மைகள்.

கூடையை இறக்கி வைத்தாள்.

“குழந்தைக்கு எதற்கு சூலம்?”

“பாட்டி. நான் பொம்மை விக்கறதே வயிற்றுப் பசியைப் போக்கத்தான். சில இடங்களில் தப்பான ஆட்களும் இருக்காங்க. அவங்களை சமாளிக்கத்  தான் சூலம்.  ஒரு முறை என்னைத் தற்காத்துக் கொள்ள சூலத்தைத் தான் எடுத்தேன். அன்றில் இருந்து சூலத்துடன் தான் வெளியே வருகிறேன். எம் பொண்ணுக்கு சூலத்தைக் கொடுத்து தைரியத்தை தந்திருக்கிறேன். அதனால யாரும் எங்கிட்ட வம்பு பண்ண வருவதில்லை.”

“நீ நல்ல கெட்டிக்காரி. எல்லா பொம்மைகளும் அருமையாக இருக்கு. இந்தா பொம்மைகளுக்குக் காசு. சாமார்த்தியமா மானுஷங்களைச் சமாளிக்க தெரிஞ்சுகிட்ட.  தைரியமான ‌பொண்ணு. உன்னைப் போல எல்லா பெண்களும் இருக்கணும். உன்னைப் பற்றி நான் கதையா எழுதறேன்.”

 “தாராளமா எழுதுங்க. சரி மா வர்றேன்.”

ஒவ்வொரு பெண்ணும் காளியின் மறு உருவம். தற்காத்துக் கொள்ள சூலத்தை ஏந்த வேண்டும்.

126

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன