சசிகலா விஸ்வநாதன்/நேபாளம் இனி வேண்டாம்

அழகிய சிங்கரின் என்பா
(நேபாளம் இனி வேண்டாம்)

(1)
நெஞ்சில் நிறுத்திட; நேசனாகும் அவன்!
தஞ்சம் அடைந்தோர்க்கு கஞ்சன் அவன்!
வஞ்சியாது அஞ்சேல் என இருக்கையில்;
நேபாளம் இனி வேண்டாம்.

(2)
அஞ்செழுத்து மந்திரத்தை நெஞ்சிலே எழுது
எஞ்சிய போதெல்லாம், செஞ்சடையானை நினை.
நஞ்சுண்டன் நயந்தே, உன்னை தன்மயமாக்க;
நேபாளம் இனி வேண்டாம்

(3)
இடையூர்தி உன் தரிசனம் கிட்ட,
நேபாளம் போக வேண்டுமா; வினவிட
விடை அளிப்பான்; அவன் தடையின்றி,
நேபாளம் இனி வேண்டாம்.

(4)
சீறார் பெருந்துறை உறையும் இறையனார்;
உம்பரும் போற்றும் உமாபதி: மதுரையிலிருக்க,
மயிலை வாழ் கபாலி சொல்கிறான்;
நேபாளம் இனி வேண்டாம்

(5)
யாதும் சுவடு படாமல் திருவையாற்றிலும்
திருவாலங்காட்டிலும், திருவொற்றியூரிலும்
திருவான்மியூரிலும்; திருவிடைமருதூரிலும்,
நான் காண, சிவனார் இருக்கையில்
நேபாளம் இனி வேண்டாம்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன