
1.
எப்போதும் என்றென்றும் எனக்குத்
தோன்றியதில்லை
ஆபத்து மிகுந்த
தேசத்திற்குப் போக.
இருக்குமிடத்தில் இருப்பது
உசிதம் உசிதம்
நேபாளம் இனி வேண்டாம்
கண்ணீர் விட
ஓரிடம் வேண்டும்
உறவுகளுடன் பிரிந்துபோக
ஓரிடம் வேண்டும்
புதைக்குழியில் புதைந்துபோக
நேபாளம் இனி வேண்டாம்
3
ஆண்டவனே ஏன்
புத்திக்கெட்டுப் போனார்கள்
நம் நாட்டிலேயே
எத்தனையோ
கோயில்கள் உண்டு
இன்னொரு நாட்டிற்குப்
போக வேண்டுமா?
நேபாளம் இனி வேண்டாம்
4
எனக்கு என்னமோ
நேபாளம் என்றால்
பிடிக்காது. ஏன் என்றால்
பிடிக்காது
காரணம் எதுவும்
என்னிடம் இல்லை
நேபாளம் இனி வேண்டாம்
5
நேபாளம் போக
வேண்டுமென்று
தோன்றியதில்லை
லோகல் திருப்திக்குக்
கூடக் கூட்டம்
வேண்டாம் என்று
மனம் சொல்லும்
நேபாளமோ இனி வேண்டாம்
