செல்லம் சேகர்/பிரும்ம முஹுர்த்தம் ஒரு ஆன்மீக அறிவியல்

ஆன்மிகம் 5

நமது சிறுவயது முதல் விடியற் காலையில் எழுந்து படித்தால் நன்கு மனதில் பதியும் . விடியற்காலையில் விளக்கேற்றுவது விசேஷம் .. விடியற் காலை நேரத்தை பிரும்ம முஹூர்த்தம் என்று கூறுவார் .
இதற்கான கதை பிரும்மா நீண்ட நேரம் தூங்கியதால் அவரை சிவ பெருமான் எழுப்பி இந்த கலியுகத்தில் பிரும்மாவின் இரவை பகல் ஆக்கும்படி உத்தரவிட்டார் . அதாவது சத்யுகம் என்ற உலகத்தை பூமியில் ஏற்படுத்த கூறினார் .
அதன்படி பிரும்மாவை நாள் முழுவதும் இறைவனை பற்றிய நினைவு இருந்தாலும் அதிகாலை என்ற பிரம்ம முகூர்த்தத்தையும் சந்தியா காலத்தையும் மிக சிறப்பான மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிக்கான நேரமாக பயன்படுத்த சிவபெருமான் கட்டளையிட்டார் … பிரம்மாவே இந்த அதிகாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி செய்ததால் அவரது பெயராலேயே பூமியின் அதிகாலை நேரம் பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது
நமது இறைவழிபாட்டை செய்யும்போது பிரும்மாவும் சரஸ்வதியும் நம்மை ஆசிர்வதிப்பதாக ஐதீகம் .
காலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை உள்ள நேரமே ஆகும் அதாவது சூரியன் உதிப்பதற்கு 90 நிமிடங்கள் முன்னால் துவங்கி சூரியன் உதிப்பது வரை உள்ள நேரமே ப்ருஹ்ம முஹூர்த்தம் .
அதில் ஆன்மீகமும் அறிவியலும் உள்ளது . அறிவியலை பாப்போம் ..
இந்த நேரத்தில் ஆகாய மண்டலத்தில் ஆக்சிஜன் அளவு சுத்தமாக இருக்கும் . இதனால் பிராண வாயுவின் தாக்கமும் அதிகமாக இருக்கும் . உலகம் அமைதியாக இருக்கும் . இந்த நேரத்தில் அதிக வாகன போக்கு வரத்து இல்லாமல் சத்தமும் குறைவாக அதேநேரம் மாசும் குறைவாக இருக்கும் . இந்த அதிகாலையில் நாம் விழிப்பது நமது மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் , உடல்நிலையில் ஹார்மோன் சமநிலையில் வைக்கும் .
அமைதியாக கண்மூடி தியானித்தால் நம் உடலில் ஒரு தூய்மையான சக்தியை உண்டாக்கி நம்மை நாமே நிதானமாக்கலாம். அதனால் மனம் ஒருமுகப்படும் . அதனால் த்யானம் , இறை வழிபாடு , கல்வி சம்பந்த விஷயங்களை இந்த நேரத்தில் செய்யும்போது மனம் நன்கு ஒருமை படும் . Focus கிடைக்கும் .
இந்த நேரத்தில் ஒற்றை விளக்கேற்றி வைத்து நாம் நம் பிரச்சனைகளை இறைவனிடம் கூறி மனதை ஒருமுகப்படுத்தி வேண்டுவதின் மூலம் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் . குழந்தைகள் தங்கள் படிப்பை இந்த நேரத்தில் படிக்கும்போது கவனம் சிதறாது .
பிரபஞ்ச சக்தியும் தெய்வசக்தியும் சேர்ந்த பிரம்ம முகூர்த்த கண் விழிப்பும் வழிபாடும் நம் அனைவரின் ஆசைகளையும் பூர்த்தி செய்ய நாம் வேண்டுவோம் . மனம் மெய் ஆன்மா அனைத்திற்கும் சக்தி கிடைக்கும் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன