கஸ்தூரிகுருசாமி /துர்க்கை

கீதாவின் கணவன் லட்சுமணன் குடியினால் தன்னையும் அழித்து, தன் குடும்பத்தையும் கஷ்டப்படுத்துவான். குழந்தை பசியினால் துடிப்பதைக் காணச் சகிக்காது   கீதா அந்தந்த மாதத்திற்கு ஏற்ப பூஜை சாமான், காய்கறி,கொலு பொம்மை, அகல் என விற்று அதில் வரும் பணத்தால் குழந்தையைப் பசியிலிருந்து காப்பாற்றுவாள். அவள் அழகிற்கு எந்த சேலை உடுத்தினாலும் பேரழகியாகத் தான் இருந்தாள்.

நவராத்திரி நேரம் பொம்மை  விற்க போகும்போது அவள் மகள்” அம்மா நானும் வாரேன் “என அடம் பிடித்தாள். அவளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு சென்றாள். எல்லா கடவுள் பொம்மைகளும் அவள் கூடையில் இருந்தன. வழியில் ஒரு பாட்டி சாமி பொம்மைகளை வாங்கும் போது “ஏண்டி பிள்ளை கையில் சூலாயுதம் கொடுத்திருக்கிறாய்”,எனக் கேட்க

 ” பொம்பளைங்க அவர்களை எதிர்ப்பவர்களை அழிக்கும் துர்கையாக மாறுவார்கள் பாட்டி என் மகளும் ஒரு துர்க்கை தான்” என்றாள்.பேசிக் கொண்டிருக்கையில், “நேரம் ஆயிற்று வீட்டிற்குப் போய் இரவு சமையல் வேலை செய்ய வேண்டும்” என வேகமாக வீட்டை பார்த்து நடந்தாள்.மேகம் இருண்டது. இடி இடித்தது. திடீரென மின் வெட்டு. எங்கும் இருட்டு எதிரில் வருபவர்கள் நிழலாகத் தான் தெரிந்தார்கள். கூடையில் இருக்கும் கடவுள்களை வேண்டிக்கொண்டு வேகமாக நடந்து கொண்டிருக்கும்போது  இரு கைகள்  அவளை சுற்றி அணைப்பது போல் இறுகப்பற்றவே, “யாரது விடு. வீட்டிற்குப் போக வேண்டும்” எனக் கத்தினாள்.

ஏன்மா பொம்மையில் கிடைக்கின்ற லா பத்தை விட அதிகமாகவே கொடுக்கிறேன். என்றார். இனியும் கரண்ட் வரவில்லை. அவளால் நடக்கவும் முடியவில்லை. பிடி இறுக்கமாகவே, விடுய்யா  என கத்தினாள்.திடீரென “அய்யோ  என் கண் போச்சே” என அவன் கத்தவும் கரண்டு வரவும் சரியாக இருந்தது.இடுப்பில் இருந்த பொன்னி சூலாயுதத்தை அவன் மேல் குத்த, அது நேராக அவன் கண்களில் இறங்கிற்று.

185 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன