கௌரி சங்கர்/தெய்வீக அருள்


கண்மணி பொம்மை விற்பவள். கணவன் நோய்வாய்ப்பட்டு இருக்கையில், அவளுக்கு தெரிந்த ஒரே குடும்ப தொழில் மண் பொம்மைகள் செய்வது விற்பது தான். அவளை நம்பி கைக்குழந்தை விசாலினி வளர்ந்து வருகிறாள். விடிகாலை ஆறு மணிக்கே கூடையில் விதவிதமான தெய்வ பொம்மைகளை சுமந்து கொண்டு அருகில் உள்ள நகரின் தெருக்களில் அவள் உலா வருவதை பார்க்கலாம். பொருட்காட்சி மைதானங்களில் பொம்மைகள் விற்றால் கூடுதல் காசு கிடைக்கும்.
அன்று ஞாயிற்றுக்கிழமை.
கூடையில் இருந்த முருகன், கிருஷ்ணன், ராதை, ராமன், சீதை பொம்மைகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.
முருகன் சொன்னான் – “மண்புழுக்களிடம் இருந்து காப்பாற்றி நம்மை பொம்மையாக உருமாற்றி கண்மணி விற்கிறாள். வாங்குபவர்கள் பூஜை அறைகளில் வைத்து வழிபடுகிறார்கள். நம்மை விற்றால் காசு. கண்மணியின் குடும்பத்தினருக்கு நாம் எதாவது செய்தாகவேண்டும்.”
அணைத்து தெய்வ பொம்மைகளும் ஆமோதித்தன.
பிள்ளையார் சொன்னது – “தம்பி அவளிடம் இருந்து வாங்கிய தெய்வீக பொம்மைகள் தான் அருள் கிடைக்க வழி செய்யும் என்ற நம்பிக்கையை வணங்குபவர்கள் மனங்களில் விதைக்கிறேன்.”
வருடங்கள் கழிந்தன.
ஒருநாள் – “நாட்டின் சிறந்த தொழில் முனைவோர்” என்ற ஜனாதிபதியின் விருது ஒன்றை கண்மணி பெற்றுக்கொண்டு இருக்கும் காணொளிகள் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டுக்கொண்டு இருந்தன.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன