வனஜா முத்துக்கிருஷ்ணன்/உயிருள்ள பொம்மை


“என்னோட பேரு வள்ளி. ரோட்டோரம் ஒரு கூடாரம் போட்டு நானும் என் புருஷனும் வாழ்ந்துகினு இருக்கோம். இந்தக் கூடைல இருக்கிற பொம்மைங்களை என் புருஷன் செஞ்சுத் தருவாரு. நான் போயி வித்துட்டு வருவேன். என்னோட புள்ளை மீனாட்சியும் கையில ஒரு சூலத்தை எடுத்துகினு என் இடுப்புல உட்கார்ந்து வரும். காளி கோவிலில் தனியா அழுதுகிட்டு இருக்கும் போது தூக்கிட்டு வந்து வளர்க்க ஆரம்பிச்சேன்.மீனாட்சிக்குப் பேச்சு வராது.

ஒரு நாளு பொம்மைங்களை வித்துட்டு வரும்போது அந்த ஊருல ஒரே கலாட்டா. . ஒரு புள்ளையைக் காணோம்னுஅதோடஅம்மாஅழுகை.
நான் அந்த ஊருல இருக்கிற காட்டுல தேடினேன்.
அப்போ அங்க அந்த புள்ளையை தூக்கிகினு சிலரு ஓடியதைப் பார்த்த மீனாட்சி அது கையில இருந்த சூலத்தை அவங்க மேல எறிஞ்சா. சூலம் மரத்தில குத்தினதும்
அந்தக் கொலைகாரப் பசங்க பயந்துகிட்டு கீழ விழுந்தாங்க.
ஊர்காரங்க போய் பிடிச்சாங்க.

ஊருக்காரங்க மீனாட்சியைப் பார்த்து இந்தப் பொண்ணுதான் காப்பாத்துச்சுன்னு சொன்னதும், அந்தப் புள்ளையோட அம்மா மீனாட்சியைப் பார்த்து “நீதான் என்னோட தெய்வம்”னு அழுதாங்க.

மீனாட்சியை ஆத்தா எனக்குத் தந்த உசிருள்ள தெய்வ பொம்மைன்னு கட்டிகிட்டு முத்தமிட்டேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன