‘காந்தி  மஹ்ஹான்’ 

வணக்கம்.


இன்று 69வது கவிதை நேசிக்கும் கூட்டம் வெற்றிகரமாக நடத்தி முடித்தேன்.  நண்பர்களுடைய உதவியால். ஏன் இம்மாதிரியான கூட்டங்களை எனக்குள் கேட்டுக்கொள்கிறேன்.  இன்று கவிதை எழுதும்

பலருக்கும் கவிதைகளை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.  இது ஒரு காரணம். நாம் எதுமாதிரியான கவிதைகளை எழுதுகிறோம். அல்லது கவிதைகளை வாசிக்கிறோம் என்பதையும் நாம் கேட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.  ‘காந்தி மஹ்ஹான்’ என்ற தலைப்பில் ஞானக்கூத்தன்  எழுதிய கவிதை கசடதபறாவில் வெளிவந்தது.  இந்தக் கவிதை கசடதபற வில் பிரசுரமானது டிசம்பர் 1970.  கிட்டத்தட்ட இக் கவிதை எழுதி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.  இது சிறப்பான கவிதை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.  ஞானக்கூத்தனுக்கு அசாதியமான அங்கத உணர்வு உண்டு. அப்படி அங்கத உணர்வோடு எழுதப்பட்ட கவிதை இது.  ஆனால் அக் கவிதையை வேறு விதமாக சொல்கிறார் கால சுப்ரமணியம்.  இதில் ஞானக்கூத்தன் கவிதையைவிட ஓவியர் ஆதிமூலம் ஓவியமும் சிறப்பு வாய்ந்தது. காந்தியை இதுமாதிரி யாரும் ஓவியம் வரைந்திருக்க முடியாது.

   இதை யாரும் மறக்கமாட்டார்கள். திரும்பவும் சந்திப்போம்.


அழகியசிங்கர்